நம்முடைய வாழ்க்கை சந்தோஷமாக, மனநிறைவாக அமைய வேண்டுமா. என்ன செய்வது? நம் தொழில் சிறப்பாக நடக்க வேண்டும். வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் நல்ல சம்பளம் கிடைக்க வேண்டும்.

அல்லது பாட்டன், பூட்டன் சேர்த்துவைத்த சொத்தாவது இருக்கவேண்டும். நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டும். இதில் எல்லாம் அமைய இல்லை என்றாலும், ஏதாவது ஒன்றாவது நல்லபடியாக அமைய வேண்டுமா?.

அப்போதுதான் நம் தலைவிதி நன்றாக இருக்க முடியும். ஆண்டவன் எழுதிய எழுத்தை நம்மால் அவ்வளவு சுலபமாக மாற்றி எழுதிவிட முடியுமா? கட்டாயம் முடியாது.

என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் இறைவழிபாட்டின் மூலமும், நம்முடைய விடாமுயற்சியின் மூலமும் நம் கஷ்டங்களை குறைத்துக் கொள்ளலாம்.
நம் வாழ்க்கையை விதியை முழுமையாக மாற்ற முடியாவிட்டாலும், ஓரளவு நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு என்ன செய்யலாம் என்று சிந்திப்பது தவறு ஒன்றும் இல்லை.

அந்த வகையில் சித்தர்கள் நமக்கு கூறிவிட்டு சென்ற ஒரு எளிமையான சின்ன பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.