Breaking News

நாட்டில் இதுவரை கொரோனா தொற்றாளர்கள் பயணித்த 6 பேருந்துகள் இனங்காணல்.

கொரோனா தொற்றாளர் பயணித்த ஆறு பேருந்துகள் இதுவரையில் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (14) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது போக்குவரத்து அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் ND 4890 கொழும்பு – மெதகம பேருந்து, ND 2350 மாகும்புர – காலி பேருந்து, ND 0549 கடவத்த – அம்பலாங்கொட பேருந்து, ND 6503 கொழும்பு – யாழ்ப்பாணம் பேருந்து,

ND 9788 எல்பிட்டிய – கொழும்பு பேருந்து மற்றும் NF 7515 காலி – கடவத்த பேருந்து போன்றவை இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அதுசொகுசு பேருந்துகளினுள் பயணிகளை ஏற்றும் போது அவர்களுடைய உடல் வெப்பநிலையை பரிசோதிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

தந்போது பேருந்துகளில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

About Kilavan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *