Breaking News

LOCAL NEWS

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம்..!!

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்குவதற்கான காலத்தை ஏழு நாட்களாக குறைப்பது தொடர்பிலேயே இன்று இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலுக்குள்ளாகும் போது எதிர்கொள்ளும் பல்வேறு சிரமங்களை கருத்திற் கொண்டே …

Read More »

இலங்கையில் புதிதாக கைத் தொலைபேசியொன்றை வாங்குபவர்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் மிக முக்கிய அறிவித்தல்.!!

சிம் அட்டையினால் செயற்படும் தொலைத்தொடர்பு உபகரணங்களை கொள்வனவு செய்யும் போது அனுமதிப்பத்திர உரிமத்தை கொண்டுள்ள விற்பனையாளர்களிடமிருந்தே அவற்றை வாங்குமாறு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அத்துடன் புதிய கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்யும் போது, குறித்த தொலைபேசி இலங்கையில் பதிவு செய்துகொள்ளப்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்கான முறைமையொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.குறுந்தகவலொன்றின் ஊடாக குறித்த தொலைபேசி தொடர்பில் அறிந்துகொள்ள முடியும். இதன்படி, கையடக்கத் தொலைபேசியிலுள்ள இமி இலக்கத்தை 1909 என்ற இலக்கத்திற்கு அனுப்புவதன் …

Read More »

இரணைமடு குளத்தின் மேலும் இரு வான்கதவுகள் இன்று திறப்பு

IRANAIMADU KULAM

தொடர்சியான நீர்வரத்துக் காரணமாக இரணைமடுக்குளத்தின் மேலும் இரு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்தில் தொடர்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக இரணைமடு குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதன்காரணமாகவே குளத்தின் 2 இரண்டு வான் கதவுகள் இன்று காலை 8.00 மணிக்கு 6 அங்குலங்கள் அளவில் திறக்கப்பட்டுள்ளன. மேலும் நீர்ப்பிடிப்பு பகுதியில் நீரின் அளவு மழைவீழ்ச்சியின் அடிப்படையில் மேலும் அதிகரிக்கலாம். எனவே தயவுசெய்து அனைவரும் விழிப்புடன், அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி அனர்த்த முகாமைத்துவப்பிரிவு …

Read More »

பெண் உத்தியோகஸ்தருக்கு தொலைபேசியில் பாலியல் தொல்லை .? வடக்கு கல்வி அதிகாரி அதிரடியாகக் கைது..!!

வடமாகாண மும்மொழி கற்கை நிலையத்தில் பணியாற்றும் அதிகாரியொருவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடமாகாண மும்மொழி கற்கை நிலையத்தின் உயரதிகாரியொருவர் தனக்கு தொலைபேசி வழியாக பாலியல் தொல்லை தருவதாக, அங்கு பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பில் வடமாகாண கல்வியமைச்சில், பெண் உத்தியோகத்தர் தரப்பினால் முறைப்பாடு செய்யப்பட்டது. எனினும், வடக்கு அதிகாரிகள் அதை கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, அவர்கள் செய்த மேன் முறையீடுகளையடுத்து, …

Read More »

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டின் எந்தப் பகுதியிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம்

கொரோனா வைரஸ் காரணமாக கடும் ஆபத்து நிலவுகின்ற பகுதிகளில் தேவைப்பட்டால் ஊரடங்கினை பிறப்பிப்பதற்கு தயார் என இராணுவதத தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் குறித்து நாளாந்தம் வெளியாகும் புள்ளிவிபரங்களை அதிகாரிகள் அவதானித்து வருகின்றனர் என தெரிவித்துள்ள அவர், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நோயாளிகள் காணப்படும் பகுதிகளில் அவசியமென்றால் ஊரடங்கைப் பிறப்பிப்பதற்கு அரசாங்கம் தயார் என தெரிவித்துள்ளார். ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் …

Read More »

நாட்டில் இதுவரை கொரோனா தொற்றாளர்கள் பயணித்த 6 பேருந்துகள் இனங்காணல்.

கொரோனா தொற்றாளர் பயணித்த ஆறு பேருந்துகள் இதுவரையில் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (14) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது போக்குவரத்து அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் ND 4890 கொழும்பு – மெதகம பேருந்து, ND 2350 மாகும்புர – காலி பேருந்து, ND 0549 கடவத்த – அம்பலாங்கொட பேருந்து, ND 6503 கொழும்பு – யாழ்ப்பாணம் பேருந்து, ND 9788 எல்பிட்டிய – கொழும்பு பேருந்து …

Read More »

மேலும் அதிகரித்த கொரோனா..!! புதிய கொரோனா வலயமாகிறதா கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம்?

கட்டுநாயக்கவில் அமைந்துள்ள நெக்ஸ்ற் (‍NEXT) ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 11 ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தொழிற்சாலையில் நேற்று ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்நிலையில் ஏனைய ஊழியர்களுக்கு இன்று (சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட பி.சி. ஆர்.பரிசோதனையிலேயே இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இதேவேளை, மினுவாங்கொட கொரோனா கொத்தணியில் இன்று 103 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு ஆயிரத்து 896 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

ஆபத்தாக மாறியுள்ள மினுவாங்கொட கொரோனா.!! தற்போது வெளியாகியுள்ள புதிய தகவல்..!

மினுவாங்கொட பிரென்டிக்ஸ் கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களுக்கு நோய் அறிகுறிகள் ஏற்படவில்லை சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்றுக்கான எவ்வித அறிகுறிகளும் காணப்படவில்லை என சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது. பீசீஆர் பரிசோதனைகளின் ஊடாகவே இவர்களுக்கு கொரோனா தொற்றியமை உறுதி செய்யப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 103 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அதற்கமைய, மினுவாங்கொட பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் பணியாளர்கள் இருவரும் அவர்களுடன் தொடர்பை பேணிய 101 நபர்களுமே …

Read More »

மருத்துவர்கள் எச்சரிக்கை.!! இந்தியாவைப் போன்று மிகவும் நெருக்கடி மிகுந்த ஆபத்தான நிலைமை இலங்கைக்கு ஏற்படும் அபாயம்.!!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில் கொரோனா தொற்றாளர்கள் எங்குள்ளார்கள் என்பதனை உறுதியாக கூற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை வைத்திய பரிசோதனை நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார். இவ்வாறான ஆபத்தான சூழ்நிலையில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செய்யப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.மக்கள் அவதானமாக செயற்படவில்லை என்றால் எதிர்வரும் நாட்களில் இந்தியா போன்று இலங்கையிலும் நோயாளர்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக அவர் …

Read More »

யாழ் இணுவிலைச் சேர்ந்த களனிப் பல்கலைக்கழக மாணவி கொழும்பில் உயிரிழப்பு.

யாழ் இணுவிலைச் சேர்ந்த களனிப் பல்கலைக்கழக மாணவி கொழும்பில் உயிரிழப்பு கொழும்பு வெள்ளவத்தையில் வசித்து வந்த யாழ் இணுவில் பகுதியைச் சேர்ந்த களனிப் பல்கலைக்கழகத்தில் 1ம் வருட மாணவி செல்வி யதீசா ஸ்ரீதர் (வயது 20 ) தீடிரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளார் கொழும்பு வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் குறித்த மாணவி சிகிச்சை பயனின்றி நேற்று 08-10-2020 வியாழக்கிழமை உயிரிழந்தார் பெற்றோருக்கு ஒரே மகள் என்பதுடன் இவரின் உயிரிழப்பு …

Read More »